இனிய குடியரசு தின நல்வாழ்த்து THANGAMANI DHARMALINGAM THANGAMANI DHARMALINGAM THANGAMANI DHARMALINGAM தங்கமணி »

Wednesday, December 10, 2008

கொங்குத்தமிழ்

கொங்குத் தமிழ் என்பது கொங்கு நாட்டு மக்கள் பேசும் தமிழ் மொழி ஆகும். கொங்கு என்ற சொல்லுக்குத் தேன், பூந்தாது என்று பொருள். ஆயினும் அதற்கும் இந்த நாட்டின் பெயருக்கும் தொடர்பிருப்பதாக இன்னும் மொழியியல்படிச் சான்றுகள் இல்லை. தமிழின் சிறப்பு 'ழ' என்பது போல் கொங்குத் தமிழின் சிறப்பு 'ற' மற்றும் 'ங்' என்பனவாகும். என்னுடைய, உன்னுடைய என்பதை என்ற, உன்ற என்றும், என்னடா என்பதை என்றா என்பார்கள். சாப்பிட்டுவிட்டு, குளித்துவிட்டு என்பனவற்றை சாப்டுபோட்டு, "தண்ணிவார்த்துகுட்டு”, 'தண்ணிஊத்திக்கிட்டு' என்று கூறுவார்கள். மரியாதை கொடுத்துப் பேசும் தமிழ் கொங்குத் தமிழ். ஏனுங்கோ, சொல்லுங்கோ, வாங்கோ, போங்கோ என்று எதிலும் 'ங்கோ' போட்டு மரியாதையாகப் பேசுவார்கள். பெரியவர்களிடம் பேசும் போது 'ங்கோ' என்பதற்கு பதில் 'ங்' போட்டும் பேசுவார்கள். சொல்லுங், வாங், போங், சரிங், இல்லீங் என்று 'கோ' வை சொல்லாமல் முழுங்கி விடுவார்கள்.

கொங்குப் பகுதியில் புழங்கும் சில சொற்கள்
(அகரவரிசையில்)
அக்கட்ட, அக்கட்டு. அக்கட்டாலே - அந்த இடம், அந்த இடத்திலே. "நீ அக்கட்டாலே போய் உட்காரு"
அங்கராக்கு - சட்டை
அட்டாரி, அட்டாலி - பரண்
அப்பச்சி , அப்புச்சி- தாய்வழித் தாத்தா
அப்பு - அறை. (அவள ஓங்கி ஒரு அப்பு அப்புடா, செவுனி திலும்பரப்பல)
அம்மாயி - அம்மாவின் அம்மா
அப்பத்தாள் - அப்பாவின் அம்மா
ஆம்பாடு - காலும் இடுப்பும் சேரும் மடிப்பான இடம் (ஆம்பாட்டிலே தேய்த்துக் குளி)
இக்கட்டு - இந்த இடம்
இட்டாரி (இட்டேறி) - தடம் (வயல்களினிடையே செல்லும் வரப்புப்பாதை, வண்டிப்பாதை)
இண்டம் பிடித்தவன் - கஞ்சன்
உண்டி - (sample) = உண்ணும் பதம்? - தர்பூசணியில் உண்டிபோட்டுக்கொடு; எப்படி இருக்கிறதென்று பார்க்கலாம்
ஊக்காலி (?ஊர்க்காலி)- பெரியவர்கள் சொல் மதியாமல் தான்தோன்றித்தனமாக சுற்றுபவர்களை ஊக்காலி என்பர். ( ரவுடி )
எச்சு - அதிகம்.
எகத்தாளம் - நக்கல், பரிகாசம்
ஏகமாக - மிகுதியாக
ஒட்டுக்கா - ஒரேயடியாக, இணைந்து (இரண்டு பேரும் ஒட்டுக்காகப் போயிட்டு வாருங்கள் - இருவரும் இணைந்து சென்று வாருங்கள்)
ஒடக்கான் - ஓணான்
ஒப்பிட்டு - போளி
ஒளப்பிரி - உளறு "இவன் என்ன இப்படி ஒளப்பிரிக்கிறான்"
ஒறம்பற - உறவினர் (உறவின்மு்றை) - விருந்தினர்
ஓரியாட்டம் -சண்டை: அவிய பங்காளிகளுக்குள்ள எப்பவுமே ஓரியாட்டம்தான்.
கட்டுத்தரை - மாட்டுத் தொழுவம்
கட்டிச்சோற்று விருந்து - கட்டிச்சாத விருந்து , வளைகாப்பு
கரடு - சிறு குன்று
கண்ணாலம் - கல்யாணம் \ திருமணம்
கூம்பு - கார்த்திகை தீபம் ( கூம்பு அவிகிறதுக்குள்ளே அந்தக் காரியத்தைப் பண்ணிடு )
குரல்வளை \ தொண்டை
கோடு - கடைசி ( கோட்டுக்கடை - கடைசிக்கடை, அந்த கோட்டில பாரு - அந்த கடைசில பாரு)
சாடை பேசுறான் - மறைமுகமாக தாக்கிப் பேசுகிறான்
சிலுவாடு - சிறு சேமிப்பு
சீரழி - நிலைகுலைதல் (அங்கிங்கே அலைந்து சீரழியவேண்டாம்)
சீராட்டு - கோபம். (கட்டிக் கொடுத்து மூணுமாசம் கூட ஆகலை. அதுக்குள்ளே பிள்ளை சீராடிட்டு வந்துவிட்டது)
சுல்லான் (சுள்ளான்?) - கொசு
செம்புலிகுட்டி - செம்மறியாட்டுக்குட்டி
சோங்கு - சோலைபோலும் மரஞ்செடித்தொகுதி
தாரை - பாதை
தொண்டுப்பட்டி - மாடு/ஆடு அடைக்கும் இடம், தொழுவம் - ஆட்டைத் தொண்டுப்பட்டியிலே அடை
துழாவு - தேடு
நலுங்கு - உடல் நலம் குன்றிய ( குழந்தைகள் உடல் நலம் குன்றி இருந்தால் மட்டுமே நலுங்கு என்ற சொல்லை புழங்குவார்கள், பெரியவர்களுக்கு இச்சொல்லை பயன் படுத்த மாட்டார்கள் - அவங்க குழந்தை நலுங்கிகிச்சாம் )
நாயம் - பேச்சு ( அவன் பேச்சு யாருக்கு வேணும் - அவன் நாயம் யாருக்கு வேணும், அங்க என்னடா பேச்சு - அங்க என்னடா நாயம் )
நோக்காடு - நோய், வலி: அவனுக்கென்ன நோக்காடோ தெரியலை. இன்றைக்கு வரக் காணோம்.
நோம்பி - (நோன்பு) திருவிழா
பவுதியாயி நோம்பி - பகவதி அம்மன் திருவிழா
படு - குளம்போன்ற ஆழமில்லாத நீர்நிலை
பழமை - பேச்சு ( அங்க என்ன பேச்சு - அங்க என்ன பழமை )
பாலி - குளத்தை விடச் சிறிய நீர்நிலை.
பிரி - பெருகு, கொழு ("பெண்கள் மாசமாக இருக்கும்பொழுது வயிறு பிரியும்")
புண்ணியாசனை - (< வடமொழி: புண்யாகவசனம்) புதுமனை புகுவிழா
பெருக்கான் - பெருச்சாளி
பொக்கென்று - வருத்தமாக (மிட்டாய் தரேனென்று சொல்லிட்டுத் தராமல் இருந்தால் குழந்தை பொக்கென்று போயிடும்)
பொட்டாட்ட - அமைதியாக இருத்தல்
பொடக்காலி - புழக்கடை
பொடனி, பொடனை - (புடனி, பிடனி, பிடரி) பின்கழுத்து
பொறந்தவன் - உடன் பிறந்த சகோதரர்
பொறந்தவள் - உடன் பிறந்த சகோதரரி
மச்சாண்டார் - கணவனின் அண்ணன்
மழைக்காயிதம் - பாலிதீன் காகிதம்
மலங்காடு - மலைக்காடு
முக்கு - முனை, மூலை, வளைவு
வெகு - அதிக
வெள்ளாமை - வேளாண்மை \ விவசாயம்

கொங்கு வெள்ளாளர் வரலாறு

கொங்கு வேளாளர்கள் அல்லது கொங்கு வேளிர்கள் தமிழ்நாட்டின் மேற்கு மாவட்டங்களான கொங்கு நாட்டுப் பகுதிகளில் பெருமளவில் உள்ளனர். பொதுவில் இவர்களைக் கவுண்டர் என்றும் அழைப்பர். இவர்கள் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்கள். இவர்கள் சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, ஐக்கிய அமெரிக்கா, பிரித்தானியா போன்ற நாடுகளிலும் குடியேறி வசிக்கின்றனர்.
இவர்களின் தொழில் விவசாயம். கடும் உழைப்பாளிகளான இவர்கள் காடுகளை சீர் செய்து விவசாய நிலங்களாக்கினர். தற்போது விவசாயம் அல்லாமல் தொழில் துறையிலும் சாதனைகள் புரிந்து வருகிறார்கள்.
பொருளடக்கம்
1 சமுதாய அமைப்பு
2 திருமண முறை
2.1 முதல் நாள்
2.2 இரண்டாம் நாள்
2.2.1 கங்கணம் கட்டுதல்
2.2.2 நிறைநாழி செய்தல்
2.2.3 இணைச்சீர்
2.3 மூன்றாம் நாள்
3 குலம் அல்லது கூட்டம் பட்டியல்

சமுதாய அமைப்பு
இவர்கள் பல குலங்களாக/ கூட்டங்களாகப் பிரிந்துள்ளனர். ஓரே குலத்தை அல்லது கூட்டத்தை சேர்ந்தவர்கள் பங்காளிகள். இவர்களுக்குள் அதாவது பங்காளிகளுக்குள் திருமண உறவு வைத்துக்கொள்ள மாட்டார்கள்.

திருமண முறை
பிறமொழிக் கலப்பு இன்றியே கொங்கு வேளாளர் மணவினைகள் காலங்காலமாய் நிகழுகின்றன. இந்தச் சிறப்பைத் தமிழகத்தின் பிறபகுதித் திருமணங்களில் காணுதல் அருமை. கொங்கு வேளாள இனத்தை சேர்ந்த 'அருமைப்பெரியவர்' என்பவர் திருமணத்தை நடத்துவார். இவரை அருமைக்காரர் என்றும் அழைப்பர். அருமைக்காரர் ஆவதற்கு சில சடங்குகள் உள்ளன, அவர் திருமணமானவராகவும் குழந்தை பேறு உள்ளவராவும் இருக்க வேண்டும். அவரவர் தேவைக்கேற்ப கொங்கு சிவபிராமணர்களையும், குலகுருக்களையும் மங்கிலியம் என்ற தாலிபூட்டும் பொழுது வைப்பதாக கொங்கு மங்கல வாழ்த்திலுள்ளது.
கம்பர் வழிவந்தோர் ஒருவர் பாடிக்கொடுத்த மங்கல வாழ்த்து கொங்குநாட்டுத் திருமணங்களில் பாடப்பெறுகிறது. கவிச்சக்கரவர்த்தி கம்பர் கொங்கு வேளாளர் வள்ளல் சடையப்ப கவுண்டரை பெருமிதப்படுத்தும் விதமாக கொங்கு மங்கல வாழ்த்தை பாடிக்கொடுத்ததாகவும் சொல்லப்படுகிறது.

கொங்கு மங்கலவாழ்த்து
நல்ல கணபதியை நாளும் தொழுதக்கால்அல்லல்வினை எல்லாம் அகலுமே - சொல்லரியதும்பிக்கை யானைத் தொழுதால் வினைதீரும்நம்பிக்கை உண்டே நமக்கு.
என்று அது தொடங்கும்.
திருமணம் மூன்று நாட்கள் நடக்கும். திருமணம் பெண் வீட்டில் நடக்கும்.

முதல் நாள்
நாள் விருந்து இதை சோறாக்கி போடுதல் என்றும் கூறுவர். இன்று மணமக்களின் உறவினர்கள் மணமக்கள் வீடுகளுக்கு வந்து விருந்து வைப்பார்கள். இச்சடங்கு மணமகன் மற்றும் மணமகள் இருவர் வீட்டிலும் நடக்கும். விருந்துக்கு வேண்டிய அனைத்து பொருட்களையும் உறவினர்களே வாங்கி வருவர். நாள்விருந்தன்றே வீட்டில் பந்தலிடுவார்கள்.

இரண்டாம் நாள்
கலியாண நாள் அல்லது முகூர்த்த கால். இன்று நாள் விருந்தன்று கட்டிய பந்தலில் வாழை, தென்னங்குருத்தோலை முதலியவற்றை கட்டுவர். அருமைப்பெரியவருடன் மூவர் சென்று முகூர்த்த கால் வெட்டி வருவர். முகூர்த்த காலாகப் பால் மரத்தில் முக்கொம்பு கிளை வெட்டப்படும். பொதுவாக ஆல மரம், அரச மரம், பாலை மரங்களில் இது வெட்டப்படும். காலை முதல் மாலை வரை விருந்து நடைபெரும் ஆனால் மணமக்கள் அன்று காலை முதல் விரதம் இருப்பர்.
இரவில் மங்கல நீராடிய பின்னரே மணமக்கள் விரத உணவு உண்பர். இரவு விருந்துக்குப் பின் பச்சைப் பந்தலில் சனி மூலையில் காலையில் வெட்டி வந்திருந்த முகூர்த்தக்காலை நடுவார்கள். நவதானியங்களை காசுடன் சேர்த்து அதில் முடிச்சிட்டு செஞ்சாந்து, மஞ்சள் பூசி முகூர்த்தக்காலில் வைப்பர். முகூர்த்தக்காலிட்டப்பின்னரே மற்ற சடங்குகளை செய்வர்.

கங்கணம் கட்டுதல்
அருமைப்பெரியவர் கணுவில்லாத விரலி மஞ்சளை எடுத்து அதை மஞ்சள் தோய்த்த நூலில் கட்டி விநாயகர் முன்பு வைத்து அதற்கு தூப தீபம் காட்டி மணமக்களின் வலது கையில் கட்டி விடுவார்.

நிறைநாழி செய்தல்
வட்ட வடிவிலான இரும்புப் படியில் நெல்லை நிறைத்து, நூல் சுற்றிய இரட்டைக்கதிரை அதில் பதித்து வைப்பர். இது நிறைநாழி எனப்படும். இதனை ஒரு பேழையில் வைப்பர், அருமைக்காரர் செய்யும் ஒவ்வொரு பூசையின் போதும் இதனை எடுத்து சுற்றிக்காட்டுவார்.

இணைச்சீர்
இது மணமகன் வீட்டில் மட்டும் நடைபெறும் முக்கியச் சடங்காகும். மணமகனின் சகோதரி இதில் முக்கிய பங்கு வகிப்பவர். இவர் மணப்பெண் போல அலங்கரிக்கப்பட்டிருப்பார், இவர் சும்மாட்டின் மீது மூங்கில்களால் வேயப்பட்ட பேழைமூடியை சுமந்து வருவார். இதனுல் தாலியும் குழவிக்கல்லும் இருக்கும். சொம்பு நீரைக் கொடுத்து அருமைக்காரி இவரை அழைத்து வருவார். அருமைக்காரர் வெற்றிலை பாக்கு கொடுத்து மடியில் கட்டிக்க சொல்லுவார். பின் கூறைச்சேலையை கொசுவ மடிப்பில் மடித்து ஒரு புறத்தை மணமகன் கக்கத்திலும் மறுபுறத்தை சகோதரி கையிலும் அருமைக்காரர் கொடுப்பார். பின் இருவருக்கும் அருகு மணம் செய்து வைத்து இருவரையும் திருமண வீட்டிற்குள் அனுப்பி வைப்பார். இணைச்சீரின் போது இணைச்சீர்காரி (சகோதரி) கொண்டு வரும் கூறைப்புடவையை தான் முகூர்த்தத்தின் போது மணப்பெண் அணிந்து வரவேண்டும்.
மணமகன் மணமகள் வீடு செல்லும் முன் நாட்டார் கல்லை மேள தாளங்கள் முழங்க வலம் வந்து மரியாதை செலுத்துவார். தாயை வணங்கி சீர் கூடையுடன் சுற்றம் சூழ ஊர்வலமாக மணமகள் ஊரை அடைந்து அங்குள்ள பிள்ளையார் கோயிலில் தங்குவர். மணமகன் வீட்டார் பிள்ளையார் கோயிலில் தங்கியிருப்பதை அறிந்த மணமகள் வீட்டார் தங்கள் சுற்றம் சூழ மேள தாளங்களுடன் சென்று மணமகன் வீட்டாரை வரவேற்று, மணவீடு அருகே அமைந்துள்ள மணமகன் அறையில் மணமகனை தங்க வைப்பர்.

மூன்றாம் நாள்
முகூர்த்தம் இதை தாலி கட்டு என்றும் அழைப்பர். அருமைக்காரர் வாழ்த்து பாடி தாலியை எடுத்துக் கொடுக்க மணமகன் மணமகள் கழுத்தில் 3 முடிச்சுப்போட்டு மங்கல் நாணை கட்டுவார்.

குலம் அல்லது கூட்டம் பட்டியல்
முதன்மைக் கட்டுரை: கொங்கு வேளாளர் கூட்டங்கள்
கொங்கு வேளாளர் கூட்டப் பிரிவுகள் (அல்லது குலப்பிரிவுகள்) நூற்றுக்கும் மேற்பட்டவை எனக் கூறுவர். ஒரு கூட்டத்தார் அதே கூட்டத்தைச் சார்ந்த குடும்பத்தில் பெண் எடுக்க மாட்டார்கள். இதன் காரணம் ஒரே குடும்பத்தைச் சார்ந்தவர்கள் பங்காளிகள், சக உதிரத்தவர் என்பதால் பெண் கொள்வதில்லை.
அகினி
அன‌ங‌ன்
அந்துவ‌ன்
ஆதித்ர்ய கும்பன்
ஆடை
ஆதி
ஆதிரை
ஆவ‌ன்
ஆந்தை
ஆரியன்
அழகன்
பரத‌ன்
ப்ரம்மன்
செல்லம்
தேவேந்தரன்
தனஜயன்
தனவந்தன்
ஈன்சென்
என்னை
இந்தரன்
காடன்
காடை‍
காரி
காவலர்
கடுந்துவி
கலிஞி
கம்பன்
கனவாலன்
கண்ணன்
கன்னாந்தை
கருன்கண்ணன்
கௌரி
காவலன்
கிளியன்
கீரன்
கோடரஙி
கூரை
குருப்பன்
கொட்ராந்தை
கொட்டாரர்
கோவர்
கோவேந்தர்
குமராந்தை
குண்டலி
குண்குலி
குனியன்
குனுக்கன்
குயிலன்
குழயான்
மாடை
மாதமன்
மாதுலி
மாவலர்
மணியன்
மயிலன்
மழ்உழகர்
மெதி
மீனவன்
மொய்ம்பன்
மூலன்
மூரியன்
முக்கண்ணன்
முனைவீரன்
முத்தன்
முழுகாதன்
நாரை
நந்தன்
நீலன்
நெட்டை மணியன்
நீருன்னி
நெய்தாலி
நெரியன்
ஓதாலர்
ஒழுக்கர்
பாலியன்
பாம்பன்
பானன்
பாண்டியன்
பாதாரய்
பதுமன்
படுகுன்னி
பைதாலி
பனையன்
பனங்காடன்
பஞ்சமன்
பன்னை
பன்னன்
பாமரன்
பவளன்
பயிரன்
பெரியன்
பெருங்குடி
பிள்ளன்
பொடியன்
பொன்னன்
பூச்சாதை
பூதியன்
பூசன்
பொருள்தந்தான்
புன்னை
புதன்
சாத்தாந்தை
சத்துவராயன்
சனகன்
சேடன்
செல்லன்
செம்பொன்
செம்பூத்தான்
செம்வன்
செங்க‌ன்னன்
செங்குன்னி
சேரலன்
சேரன்
சேவடி
செவ்வயன்
சிலம்பன்
சோமன்
சூலன்
சூரியன்
சோதி
செளரியன்
சுரபி
தனக்கவன்
தவளையன்
தளிஞ்சி
தேமான்
தோடை
தூரன்
தொரக்கன்
தன்டுமன்
உவனன்
வாணன்
வணக்கன்
வெளையன்
வெளம்பன்
வெந்தை
வெந்துவன்
விளியன்
வில்லி
விளோசனன்
விரதன்
விரைவுளன்
( 150 க்கும் மேற்பட்ட கூட்டங்கள் உள்ளன
அன்புடன்
தங்கமணி
பட்லூர் .
நன்றீ :தமிழ் விக்கிபீடியா

Tuesday, December 9, 2008

கொங்கு மங்கள வாழ்த்து

கொங்கு வேளாளர் திருமண மங்கலவாழ்த்துகவிச்சக்கிரவர்த்தி கம்பர்
மின்பதிப்பாசிரியர் குறிப்பு: கொங்கு வேளாளர் கலியாணங்களில் நடைபெறும் மிக முக்கியமான சடங்குச்சீர்களில் ஒன்று மங்கலவாழ்த்து. குடிமகன் அல்லது மங்கலன் என்று அன்புடன் அழைக்கப்படும் நாவிதர்குலப் பெருமகன் இதனைப் பாடுவார். ஒவ்வொரு நிகழ்ச்சியாக மங்கலன் சொல்லி நிறுத்தும்போதும் மத்தளத்தில் மேளகாரர் ஒருமுறை தட்டுவார். "இது கவிச்சக்கிரவர்த்தி கம்பர் பெருமானால் பாடிக் கொடுக்கப்பட்டதென்று கொங்குநாட்டார் அனைவரும் நம்புகிறார்கள்" என்று 1913-ல் பதிப்பித்த திருச்செங்கோடு அட்டாவதானம் முத்துசாமிக் கோனாரவர்கள் குறிப்பிடுகிறார்கள். திருமண முறைகளை எளிய நாட்டு வழக்கச் சொற்களால் ஒழுங்குபெற அமைத்துப் புலவர்பிரானார் இதனை அருளினர்போலும். அதற்கேற்ப இவ்வாழ்த்தினுள் 'கங்காகுலம் விளங்கக் கம்பர் சொன்ன வாழ்த்துரைத்து' எனவரும் அடியாலும் கம்பர் குலத்தார்கள் அகவலும் தரவும் விரவிவரப் பாடினார்கள் என்று கொள்க. உ
கொங்கு வேளாளர் திருமண மங்கலவாழ்த்து
கவிச்சக்கிரவர்த்தி கம்பர் பாடியது
காப்பு வெண்பா
நல்ல கணபதியை நாளும் தொழுதக்கால்அல்லல்வினை எல்லாம் அகலுமே - சொல்லரியதும்பிக்கை யானைத் தொழுதால் வினைதீரும்நம்பிக்கை உண்டே நமக்கு. அகவல்பா
அலைகடல் அமிழ்தம் ஆரணம் பெரியவர்திங்கள் மும்மாரி செல்வம் சிறந்திடக்கந்தன் இந்திரன் கரிமா முகத்தோன்சந்திர சூரியர் தானவர் வானவர்முந்திய தேவர் மூவருங் காத்திடநற்கலி யாணம் நடந்திடும் சீர்தனில்தப்பிதம் இல்லாமல் சரசுவதி காப்பாய்!சீரிய தினைமா தேனுடன் கனிமாபாரிய கதலிப் பழமுடன் இளநீர்சக்கரை வெல்லம் தனிப்பலாச் சுளையும் 10
மிக்கதோர் கரும்பு விதவிதக் கிழங்குஎள்அவல் நெற்பொரி இனித்த பாகுடன்பொங்கல் சாதம் பொரிகறி முதலாய்செங்கை யினாலே திரட்டிப் பிசைந்துஆரமுது அருந்தும் அழகு சிறந்தபேழை வயிற்றுப் பெருமதக் களிறேஅடியேன் சொல்லை அவனியில் குறித்துக்கடுகியே வந்தென் கருத்தினில் நின்றுநினைத்த தெல்லாம் நீயே முடித்துமனத்துயர் தீர்ப்பாய் மதகரி சரணம்! 20
மங்கல வாழ்த்தை மகிழ்ச்சியாய் ஓதஎன்குரு நாதன் இணையடி போற்றிகிரேதா திரேதா துவாபர கலியுகம்செம்பொன் மகுடம் சேரன் சோழன்பைம்பொன் மாமுடிப் பாண்டியன் என்னும்மூன்று மன்னர் நாட்டை ஆள்கையில்கருவுரு வாகித் திருவதி அவள்புகழ்சிறந்த மானிடம் தாயது கருப்பம்வாழ்வது பொருந்திச் சிறந்திடுங் காலம்இந்திரன் தன்னால் இங்குவந்த நாளில் 30
பக்குவம் ஆகிப் பருவங் கொண்டுதிக்கில் உள்ளோர் சிலருங் கூடிச்சோதிடனை அழைத்துச் சாத்திரங் கேட்டுஇந்த மாப்பிள்ளை பேர்தனைக் கூறிஇந்தப் பெண்ணின் பேர்தனைச் சொல்லிஇருவர் பேரையும் இராசியில் கேட்டுக்கைத்தலம் ஓடிய இரேகைப் பொருத்தம்ஒன்பது பொருத்தம் உண்டெனப் பார்த்துத்தாலிப் பொருத்தம் தவறாமல் கேட்டுவாசல் கௌலி வலிதென நிமித்தம் 40
தெளிவுடன் கேட்டுச் சிறியோர் பெரியோர்குறிப்புச் சொல்லும் குறிப்புரை கேட்டுஉத்தம பாக்கியம் தச்சனைக் கேட்டுப்பொருந்தி இருத்தலால் பூரித்து மகிழ்ந்துசிலபேர் உடனே சீக்கிரம் புறப்பட்டுவெண்கல முரசம் வீதியில் கொட்டத்தங்க நகரி தானலங் கரித்துமுற்றமும் மனையும் முத்துகள் பரப்பிச்சித்திரக் கூடம் சிறக்க விளக்கிஉரியவர் வந்தார் உன்மகளுக் கென்று 50
பிரியமுடன் வெற்றிலை மடிதனில் கட்டிநாளது குறித்து நல்விருந்து உண்டுபூட்டு தாலிக்குப் பொன்னது கொடுத்துவாழ்வது மனைக்கு மனமகிழ வந்துமேகற்றோர் புலவர் கணக்கரை அழைத்துத்தேம்பனை யோலை சிறக்கவே வாரித்திசைதிசை எங்கும் தென்னவரை அனுப்பிக்கலியாண நாளைக் கணித்துஅறி வித்தார்பாங்குடன் முகூர்த்தப் பாலக்கால் நாட்டித்தென்னம் குலையும் தேமாங் கொத்தும் 60
பந்தல்கள் எங்கும் பரிவுடன் தூக்கிவாழை கமுகு வளர்கூந் தற்பனைமாவிலைத் தோரணம் மகரத் தோரணம்சோலை இலையால் தோரணங் கட்டிமூத்தோர் வந்து மொழுகி வழித்துப்பார்க்குமிடம் எங்கும் பால்தனைத் தெளித்துப்பெண்டுகள் வழங்கும் பெரிய கலத்தைக்கொண்டு வந்ததனைக் குணமுடன் விளக்கிநேரிய சம்பா அரிசியை நிறைத்துப்பாரிய வெல்லம் பாக்கு வெள்ளிலை 70
சீருடன் நெய்யும் தேங்காய் பழமும்வாரியே வைத்து வரிசை குறையாமல்முறைமை யதாக முக்காலி மேல்வைத்துமணம் பொருந்திய மாப்பிள்ளை தனக்குக்குணம் பொருந்திய குடிமகனை அழைத்துத்தெள்ளிய பாலால் திருமுகம் துடைத்தபின்அரும்பிய மீசையை அழகுற ஒதுக்கிஎழிலுடை கூந்தலுக்கு எண்ணெய் தனையிட்டுக்குணமது சிகைக்காய் கூந்தலில் தேய்த்துஏழு தீர்த்தம் இசைந்திடும் நீரை 80
மேள முடனே விளாவியே வார்த்துச்செந்நெல் சோற்றால் சீக்கடை கழித்துவண்ணப் பட்டுடை வத்திரந் தன்னைநெருங்கக் கொய்து நேர்த்தியாய் உடுத்திமன்னவர் முன்னே வந்தவ ருடனேவாசல் கிளறி மதிப்புடன் கூட்டிச்சாணங் கொண்டு தரைதனை மெழுகிக்கணபதி தன்னைக் கருத்துடன் நாட்டிஅருகது சூடி அருள்பொழிந் திடவேநிரம்பி யதாக நிறைநாழி வைத்து 90
வெற்றிலை பழமும் விருப்புடன் வைத்துஅலைகடல் அமுதம் அவனியின் நீரும்குழவிக்குக் கங்கணம் குணமுடன் தரித்துமுளரி மெச்சிட முகமது விளங்கிடக்களரி வைத்துக் காப்பது கட்டிக்குப்பாரி கொட்டிக் குலதேவதை அழைத்துச்செப்பமுடன் மன்னவற்குத் திருநீறு காப்பணிந்துசாந்து புனுகு சவ்வாது பன்னீரும்சேர்த்துச் சந்தனம் சிறக்கவே பூசிக்கொத்தரளி கொடியரளி கோத்தெடுத்த நல்லரளி 100
முல்லை இருவாச்சி முனைமுறியாச் செண்பகப்பூநாரும் கொழுந்தும் நந்தியா வட்டமும்வேரும் கொழுந்தும் வில்வ பத்திரமும்மருவும் மரிக்கொழுந்தும் வாடாத புட்பங்களும்புன்னை கொன்னை பூக்கள் எல்லாம்கொண்டு வந்து கொண்டை மாலைதண்டை மாலை சோபனச் சுடர்மாலைஆடை ஆபரணம் அலங்கிருதம் மிகச்செய்துதிட்டமுடன் பேழைதனில் சோறுநிறை நாழிவைத்துநட்டுமெட்டுத் தான்முழங்க நாட்டார்தன் நாட்டுக்கல்லை 110
நன்றாய் வலம்வந்து நலமாக நிற்கையிலேசெஞ்சோறு ஐந்துஅடை சிரமதைச் சுற்றித்திட்டி கழித்துச் சிவசூரி யனைத்தொழுதுஅட்டியெங்கும் செய்யாமல் அழகுமனைக்கு வந்துமணவறை அலங்கரித்து மன்னவரைத் தானமர்த்திஇணையான தங்கையரை ஏந்திழையைத் தானழைத்துச்மந்தாரை மல்லிகை மருக்கொழுந்து மாலையிட்டுஆடை ஆபரணம் அழகுறத் தான்பூண்டுகூறை மடித்துவைத்துக் குணமுள்ள மங்கையவள்பேழைமூடி தான்சுமந்து பிறந்தவனைச் சுற்றிவந்து 120
பேழைதனை இறக்கிவைத்துப் பிறந்தவளை அதில்நிறுத்திகூறைச்சேலைத் தலைப்பைக் கொப்பனையாள் கைப்பிடித்துமாப்பிள்ளை கக்கத்தில் மறுமுனையைத் தான்கொடுத்துஅருமைப் பெரியவர் அழகுமாப் பிள்ளைகையைஅரிசியில் பதியம்வைத்து ஐங்கரனைப் பூசித்துமங்கல வாழ்த்துக்கூற மணவறையில் குடிமகனுக்குச்செங்கையால் அரிசியள்ளிச் சிறக்கக் கொடுத்திடுவார்வேழ முகத்து விநாயகர் தாள்பணிந்துசந்திரரும் சூரியரும் சபையோர்கள் தானறியஇந்திரனார் தங்கை இணையோங்க வந்தபின்பு 130
அடைக்காயும் வெற்றிலையும் அடிமடியிற் கட்டியபின்முன்னர் ஒருதரம் விநாயகருக்கு இணைநோக்கிப்பின்னர் ஒருதரம் பிறந்தவர்க்கு இணைநோக்கிஇந்திரனார் தங்கை இணையோங்கி நின்றபின்புதேங்காய் முகூர்த்தமிட்டுச் செல்ல விநாயகனைப்பாங்காய்க் கைதொழுது பாரிகொள்ளப் போறமென்றுமாதா வுடனே மகனாரும் வந்திறங்கிப்போதவே பால்வார்த்துப் போசனமும் தான்அருந்தித்தாயாருடை பாதம் தலைகுனிந்து தண்டனிடப்போய்வா மகனேஎன்றார் பூங்கொடிக்கு மாலையிடப் 140
பயணமென்று முரசுகொட்டப் பாரிலுள்ள மன்னவர்கள்மதகரி அலங்கரித்து மன்னவர்கள் ஏறிவரத்தந்தை யானவர் தண்டிகை மேல்வரத்தமையன் ஆனவர் யானையின் மேல்வரநாடியே வந்தவர்கள் நட்சத்திரம் போல்வரத்தேடியே வந்தவர்கள் தேரரசர் போல்வரப்பேரணி முழங்க பெரிய நகாரடிக்கப்பூமிதான் அதிர புல்லாங்குழல் ஊதஎக்காளம் சின்னம் இடிமுரசு பெருமேளம்கைத்தாளம் பம்பை கனதப்புத் தான்முழங்கச் 150
சேகண்டி திமிர்தாளம் சிறுதவண்டை ஓசையெழத்துத்தாரி நாகசுரம் சோடிகொம்பு தானூதவலம்புரிச் சங்கநாதம் வகையாய் ஊதிவரஉருமேளம் பறைமேளம் உரம்பை திடும்படிக்கப்பலபல விதமான பக்கவாத்திய முழங்கப்பல்லக்கு முன்னடக்கப் பரிசுகள் பறந்துவரவெள்ளைக்குடை வெண்கவரி வீதியில் வீசிவரச்சுருட்டி சூரியவாணம் தீவட்டி முன்னடக்கஇடக்கை வலக்கை இனத்தார்கள் சூழ்ந்துவரக்குதிரை மீதிவர்ந்து குணமுள்ள மாப்பிள்ளை 160
சேனைகள் முன்னே சிறந்து முன்னடக்கக்கட்டியங்கள் கூறிக் கவிவாணர் பாடிவரநாட்டியங்கள் ஆடிவந்தாள் நல்ல தேவடியாள்பாகமாஞ் சீலைப் பந்தம் பிடித்திடமேகவண்ணச் சேலை மின்னல்போல் பொன்னிலங்கஅடியாள் ஆயிரம்பேர் ஆலத்தி ஏந்திவரப்பெண்ணு வீட்டார் பிரியமுடன் எதிர்வந்துமன்னவர் தங்களை வாருங்கள் என்றழைத்துஎதிர்ப்பந் தத்துடன் எதிர்மேளம் முழங்கஉடந்தையாய் அழைக்க ஒருமன தாகிப் 170
பந்து சனங்கள் பண்புமித் திரர்வரவந்தனை ஆன வாத்தியம் ஒலிக்கப்பட்டன் புலவன் பண்பாடி தக்கைகொட்டிதிட்டமாஞ் சோபனஞ் செப்பிமுன் னேவரஅரம்பை மேனகை அணிமிகும் திலோத்தமைதிறம்பெறும் ஊர்வசித் தெரிவையர்க்கு ஒப்பாய்வண்மைசேர் கூத்தி வகைபெற நின்றுநன்மைசேர் பரத நாட்டியம் ஆடிடவெகுசனத் துடனே விடுதியில் இறங்கிவாழ்வரசி மங்கைக்கு வரிசை அனுப்பும்என்றார் 180
நாழியரசிக் கூடை நன்றாக முன்னனுப்பிப்பொன்பூட்டப் போகிறவர் பேடை மயிலிக்குநல்ல முகூர்த்தம் நலமுடன் தான்பார்த்துப்பெட்டிகளும் பேழைகளும் பொன்னும் சீப்பும்பட்டுத்துணி நகையும் பார்க்கக் கண்ணாடியும்சத்துச் சரப்பணி தங்கம்பொன் வெள்ளிநகைமுத்துச் சரப்பணி மோகன மாலைகளும்திட்டமுள்ள மங்கையர்க்குத் திருப்பூட்டப் போறமென்றுஅட்டதிக்கும் தானதிர அடியுமென்றார் பேரிகையைஅருமைப் பெரியவரும் அன்ன நடையாரும் 190
பெருகும் வளைக்கையால் பேழைமுடி ஏந்திநின்றுஇன்னுஞ்சில பெண்கள் இவர்களைச் சூழ்ந்துவரச்சென்றுஉட் புகுந்தார்கள் திருப்பெண்ணாள் மாளிகையில்கொண்டுவந்த அணிகலனைக் கோதையர்க்கு முன்வைக்கக்கண்டுமனம் மகிழ்ந்தார்கள் கன்னியர்கள் எல்லோரும்நாட்டில்உள்ள சீர்சிறப்பு நாங்கள் கொண்டுவந்தோம்பூட்டுமென்றார் தோடெடுத்துப் பொன்னவளின் திருக்காதில்அடைக்காயும் வெற்றிலையும் அன்பாக மடியில்கட்டிஆணிப் பொன்னாளை அலங்கரித்துக் குலங்கோதிச்சாந்துப் பொட்டிட்டுச் சவ்வாது மிகப்பூசி 200
ஊட்டுமென்றார் நல்லுணவை உடுத்துமென்றார் பட்டாடைபொன்பூட்ட வந்தவர்க்குப் பூதக்கலம் தான்படைத்துஅன்பாக வெற்றிலை அடைக்காயும் தான்கொடுத்தார்தாய்மாமன் தன்னைத் தன்மையுடன் அழைத்துசந்தனம் மிகப்பூசிச் சரிகைவேட்டி தான்கொடுத்துப்பொட்டிட்டுப் பொன்முடிந்து பேடை மயிலாட்குப்பட்டமும் கட்டினார் பாரிலுள்ளோர் தானறியஆரணங்குப் பெண்ணை அலங்கிருதம் மிகச்செய்துமாமன் குடைபிடித்து மாநாட்டார் சபைக்குவந்துவலமதாய் வந்து நலமதாய் நின்று 210
செஞ்சோறு ஐந்துஅடை சிரம்கால் தோளில்வைத்துநிறைநாழி சுற்றியே நீக்கித் திட்டிகழித்துஅட்டியங்கள் செய்யாமல் அழகு மனைக்குவந்துமங்கள கலியாண மணவறையை அலங்கரித்துஅத்தியடித் துத்திப்பட்டு அனந்த நாராயணப்பட்டுபஞ்சவண்ண நிறச்சேலை பவளவண்ணக் கண்டாங்கிமாந்துளிர்சேர் பூங்கொத்து வண்ணமுள்ள பட்டாடைமேலான வெள்ளைப்பட்டு மேற்கட்டுங் கட்டிஉள்ளஅருமையுள்ள வாசலிலே அனைவோரும் வந்திறங்கிப்பொறுமையுள்ள வாசல்தனைப் பூவால் அலங்கரித்துச் 220
சேரசோழ பாண்டியர்கள் சேர்ந்திருக்கும் வாசலிலேசெம்பொன் மிகுந்தோர்கள் சிறந்திருக்கும் வாசலிலேவீர இலக்குமி விளங்கிடும் வாசலிலேவிருதுகள் வழங்கிடும் விருப்பமுள்ள வாசலிலேதரணியில் அன்னக்கொடி தழைத்திருக்கும் வாசலிலேபன்னீரா யிரம்பேர் பலர்சேர்ந்த வாசலிலேநாட்கரசு நாட்டி நல்ல முகூர்த்தமிட்டுப்பேய்க்கரும்பை நாட்டிப் பிறைமண்ணும் தான்போட்டுச்சாலுங் கரகமும் சந்திர சூரியரும்அம்மி வலமாக அரசாணி முன்பாக 230
ஆயிரப் பெருந்திரி அதுவும் வலமாகச்சுத்தமுடன் கலம்விளக்கிச் சோறரிசி பால்பழமும்பத்தியுடன் அத்தனையும் பாரித்தார் மணவறையில்மணவறை அலங்கரித்து மணவாளனை அங்கிருத்திஅழகுள்ள மணப்பெண்ணை அலங்காரம் பலசெய்துமாமன் எடுத்து மணவறை சுற்றிவந்துமகிழ்ச்சியது மீதூற வலதுபுறம் தானிருத்திக்குலம்பெரிய மன்னவர்கள் குவலயத்தார் சூழ்ந்திருக்கஇராமன் இவரோ! இலக்குமணன் இவரோ!கண்ணன், இந்திரன், காமன் இவர்தானோ! 240
கார்முகில் இவரோ! காங்கேயன் இவர்தானோ!என்றே பாரிலுள்ளார் ஏத்திப் பாராட்டஅத்தை மகள்தனை அழகுச் செல்வியைமுத்து இரத்தினத்தை முக்காலிமேல் இருத்திக்கணபதி முன்பாகக் கட்டும்மங் கிலியம்வைத்துஅருமைப் பெரியவர் அன்புடன் வழிபட்டுமாப்பிள்ளை பெண்ணை மணவறையில் எதிர்நிறுத்திக்கெட்டிமேளம் சங்குநாதம் கிடுகிடென்று கொட்டியார்ப்பமாணிக்க மாங்கல்ய வைடூர்யத் திருப்பூட்டிமாலைதனை மாற்றி மணவறையில் அமர்ந்தபின்னே 250
மாப்பிள்ளைக்கு மைத்துனரை வாவெனத் தானழைத்துக்கலம்பெரிய அரிசிதனில் கைகோர்வை தானுமிட்டுச்சிங்கார மானபெரும் தெய்வச் சபைதனிலேகங்காகுலம் விளங்கக் கம்பர்சொன்ன வாழ்த்துரைத்துமங்கலமும் கன்னிசொல்ல வாத்தியமெலாம் மடக்கிமறையோர் வேதம்ஓத மற்றவர் ஆசிகூறப்பிறைஆயிரம் தொழுது பிள்ளையார்க்குப் பூசைசெய்துஅருமைப் பெரியோர் அருகுமணம் செய்தபின்னர்கைக்குக் கட்டின கங்கணமும் தானவிழ்த்துத்தங்களுக்குத் தாங்கள் தாரைக்கோர் பொன்கொடுத்து 260
உரியதோர் பாட்டன் இருவருடை கைதனிலேதண்ணீர் ஊற்றியே தாரையும் வார்த்தபின்புபிரியமுள்ள மணவறையைப் பின்னும் சுற்றிவந்துசெங்கை யினாலே சிகப்பிட்டு இருவருக்கும்மங்கலக் கலியாணம் வகையாய் முடிந்ததென்றுசாப்பாடு போசனம் சந்தோச மாய்ப்போடஉண்டு பசியாறி உறவுமுறை எல்லோரும்கொண்டுவந்த பொன்முடிப்பைக் கொடுத்துச் செலுத்துமென்றார்மண்டலத்தோர் எல்லோரும் மணப்பந்தலில் இருந்துகலியாணத்தார் தம்மைக் கருத்துடனே அழைத்து 270
கண்ணாளர் தமையழைத்துப் பொன்னோட்டம் காணுமென்றார்அப்போது கண்ணாளர் அவ்விடமே தானிருந்துபணமது பார்த்துக் குணமது ஏற்றுக்கல்லு வராகன் கருவூர்ப் பணமும்வெள்ளைப் புள்ளடி வேற்றூர் நாணயம்சம்மன் கட்டி சாத்தூர் தேவன்உரிக்காசுப் பணம் உயர்ந்த தேவராயர்ஆண்மாடை பெண்மாடை அரியதோர் பொற்காசுஒருவிழி விழிக்க ஒருவிழி பிதுங்கப்பலவகை நாணயமும் பாங்காய்த் தெரிந்து 280
முன்னூறு பொன்முடிப்பு ஒன்றாய் முடிந்தவுடன்பாட்டன் இருந்து பரியம் செலுத்தினார்பந்தல் பல்லி பாக்கியம் உரைக்கமச்சினன் மார்கள் மகிழ்ந்து சூழ்ந்திருக்கச்சிற்றடிப் பெண்கள் சீர்கள் சுமந்துவரச்சந்தோ சமாகித் தங்கமுடி மன்னவர்கள்பந்தச் செலவு பலபேர்க்கும் ஈந்தார்கள்ஆடுவான் பாடுவான் ஆலாத்தி யுட்படநாடிவந்த பேர்களுக்கு நல்ல மனதுடனேதனிப்பணம் தான்கொடுத்துத் தங்கிஇரும் என்றார் 290
வாழிப் புலவர்க்கு வரிசைதனைக் கொடுத்துத்திடமுள்ள பந்தல்கீழ் வந்துநின்ற பேர்களுக்குஅரிசி அளந்தார்கள் அனைவோரும் தானறியகரகம் இறக்கிவைத்துக் கன்னி மணவாளனுக்கும்புடவைதனைக் கொடுத்துப் பொற்பாய்த் தலைமுழுகிச்சட்டுவச் சாதம் தளிர்க்கரத்தால் மாப்பிள்ளைக்குஇல்லத்தாள் பரிமாறி இனிதுண்டு இளைப்பாறிப்பண்ணை மாதிகனைப் பண்பாகத் தானழைத்துவில்லை மிதியடிகள் மிகவே தொட்டபின்புகாலும் விளங்கக் கன்னியைத் தானழைத்து 300
மஞ்சள் நீராட்டி மறுக்கஇரு அழைப்பழைத்துமாமன் மார்களுக்கு மகத்தான விருந்துவைத்துமங்கல சோபனம் வகையாய் முடிந்தவுடன்மாமன் கொடுக்கும் வரிசைதனைக் கேளீர்துப்பட்டு சால்வை சோமன் உருமாலைபஞ்சவண்ணக் கண்டாங்கி பவளநிறப் பட்டாடைஅத்தியடித் துத்திப்பட்டு ஆனையடிக் கண்டாங்கிஇந்திர வண்ணப்பட்டு ஏகாந்த நீலவண்ணம்முறுக்கு வளையல்களும் முகமுள்ள கொலுசுகளும்பதக்கம் சரப்பணி பகட்டான காசுமாலை 310
கட்டிலும் மெத்தையும் காளாங்கி தலையணையும்வட்டில் செம்பும் வழங்கும் பொருள்களும்காளை வண்டியும் கன்றுடன் பால்பசுவும்குதிரையுடன் பல்லாக்கு குறையாத பலபண்டம்நிறையக் கொடுத்தார்கள் நேயத்தோர் தானறிய!எல்லாச் சீரும் இயல்புடன் கொடுத்துஅடைவுடன் வரிசைபெற்ற அழகு மணவாளன்மக்கள்பதி னாறும்பெற்று மகிழ்ச்சியாய் வாழ்ந்திருக்க!வாழி மணமக்கள் வந்தவர்கள் வாழ்த்துரைக்க!
ஆல்போல் தழைதழைத்து, அருகுபோல் வேர்ஊன்றி,மூங்கில்போல் கிளைகிளைத்து, முசியாமல் வாழ்ந்திருக்க! 321 வாழ்த்துரை
ஆதி கணேசன் அன்புடன் வாழி!
வெற்றி வேல்கொண்ட வேலவன் வாழி!
எம்பெரு மானின் இணையடி வாழி!
மாது உமையவள் மகிழ்வுடன் வாழி!
திருவுடன் பெருமாள் சேவடி வாழி!
முப்பத்து முக்கோடித் தேவரும் வாழி
நாற்பத் தெண்ணாயிரம் ரிசிகளும் வாழி!
வேதம் ஓதிடும் வேதியர் வாழி!
பாரத தேசம் பண்புடன் வாழி!
கொங்கு நாட்டுக் குடிகளும் வாழி!
காராள குலதிலகர் கவுண்டர்கள் வாழி!
வேளாள குலதிலகர் வேளாண்மை வாழி!
மாப்பிள்ளை பெண்ணும் மகிழ்வுடன் வாழி!
வாழிய யானும் மகிழ்வுடன் வாழி!
என்குரு கம்பர் இணையடி வாழி!
வையத்து மக்கள் மற்றவரும் வாழி!
வாழி மணமக்கள் வந்தோர் வாழ்த்துரைக்க!
இப்பாட்டுக் கேட்டவர் எல்லோரும் வாழியே!
[மின்பதிப்பாசிரியர் குறிப்பு: கொங்கு வேளாளர் கலியாணங்களில் நடைபெறும் மிக முக்கியமான சடங்குச்சீர்களில் ஒன்று மங்கலவாழ்த்து. குடிமகன் அல்லது மங்கலன் என்று அன்புடன் அழைக்கப்படும் நாவிதர்குலப் பெருமகன் இதனைப் பாடுவார். ஒவ்வொரு நிகழ்ச்சியாக மங்கலன் சொல்லி நிறுத்தும்போதும் மத்தளத்தில் மேளகாரர் ஒருமுறை தட்டுவார். "இது கவிச்சக்கிரவர்த்தி கம்பர் பெருமானால் பாடிக் கொடுக்கப்பட்டதென்று கொங்குநாட்டார் அனைவரும் நம்புகிறார்கள்" என்று 1913-ல் பதிப்பித்த திருச்செங்கோடு அட்டாவதானம் முத்துசாமிக் கோனாரவர்கள் குறிப்பிடுகிறார்கள். திருமண முறைகளை எளிய நாட்டு வழக்கச் சொற்களால் ஒழுங்குபெற அமைத்துப் புலவர்பிரானார் இதனை அருளினர்போலும். அதற்கேற்ப இவ்வாழ்த்தினுள் 'கங்காகுலம் விளங்கக் கம்பர் சொன்ன வாழ்த்துரைத்து' எனவரும் அடியாலும் கம்பர் குலத்தார்கள் அகவலும் தரவும் விரவிவரப் பாடினார்கள் என்று கொள்க. பதிப்பாதாரங்கள்: (அ) தி. அ. முத்துசாமிக்கோனார், கவிச்சக்கிரவர்த்தியாகிய கம்பர் இயற்றிய மங்கல வாழ்த்து, வாழி. விவேகதிவாகரன் அச்சுக்கூடம், சேலம், 1913 (ஆ) எஸ். ஏ. ஆர். சின்னுசாமி கவுண்டர், கொங்கு வேளாளர் புராண வரலாறு, தமிழன் அச்சகம், ஈரோடு, 1963. ~ முனைவர் நா. கணேசன்]

தீரன் சின்னமலை வரலாறு

தீரன் சின்னமலை (ஏப்ரல் 17, 1756 - ஜூலை 31, 1805) இந்திய விடுதலைப் போராட்ட வீரர் ஆவார். இவர் கொங்கு நாட்டின் முதல் விடுதலைப் போராட்ட வீரர்.
பொருளடக்கம்[மறை]
1 வரலாறு
2 வெற்றி
3 தூக்கிலிடப்படல்
4 கௌரவிப்பு
5 உசாத்துணை
//

[தொகு] வரலாறு
இன்றைய ஈரோடு மாவட்டத்தில் காங்கயம் அருகில் மேலப்பாளையம் என்னும் சிற்றூரில் ஏப்ரல் 17, 1756 அன்று பிறந்தவர். அவரின் தந்தையார் பெயர் ரத்னசாமி கவுண்டர் (பயிரன் கூட்டம்), தாயார் பெயர் பெரியாத்தா (ஓதாலன் கூட்டம்). இவரின் இயற்பெயர் தீர்த்தகிரி கவுண்டர். இவர் பழைய கோட்டைப் பட்டக்காரர் மரபு என்று கூற படுகிறது. இதனால் இவர் இளம்பருவத்தில் தீர்த்தகிரிச் சர்க்கரை எனப் பெயர் பெற்றார். இவர்கள் புவிக்கும் செவிக்கும் புலவோர்கள் சொல்லும் கவிக்கும் இனிமை செய்ததால் சர்க்கரை என பெயர் பெற்றார்களாம்.
தீர்த்தகிரி இளவயதிலேயே மல்யுத்தம், தடிவரிசை, வில்பயிற்சி, வாள்பயிற்சி, சிலம்பாட்டம் போன்ற போர்ப் பயிற்சியை சிவந்தாரையர் என்பார் வழிவந்தவரிடம் கற்றுத் தேர்ந்தார்.கொங்கு நாடு அப்பொழுது மைசூரார் ஆட்சியில் இருந்ததால், கொங்கு நாட்டு வரிப்பணம் சங்ககிரி வழியாக மைசூர் அரசுக்குச் சென்றது. ஒருநாள் வேட்டைக்குச் சென்ற தீர்த்தகிரி மைசூர் அரசுக்குச் செல்லும் வரிப்பணத்தைப் பிடுங்கி ஏழைகட்கு விநியோகித்தார். அப்பொழுது, வரி கொண்டு சென்ற வரி தண்டல்காரரிடம் சென்னிமலைக்கும் சிவன்மலைக்கும் இடையில் ஒரு சின்னமலை பறித்ததாகச் சொல் என்று சொல்லி அனுப்பினார். அதுமுதல் தீர்த்தகிரிக்குச் சின்னமலை என்ற பெயர் வழங்கலாயிற்று.
இந்தியாவுக்கு வியாபாரம் செய்ய வந்த பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியினர் கொஞ்சம் கொஞ்சமாக நாட்டில் ஆதிக்கம் செலுத்துவதைத் தடுக்க வேண்டும் என்று சின்னமலை விரும்பினார். இன்றைய கேரளத்திலும் கொங்கு நாட்டின் சேலம் பகுதியிலும் இருந்த கிழக்கிந்திய கம்பெனிப்படை ஒன்றுசேராவண்ணம் இடையில் பெரும் தடையாகச் சின்னமலை விளங்கினார். டிசம்பர் 7, 1782 இல் ஐதரலியின் மறைவிற்குப் பின் திப்பு சுல்தான் மைசூர் சீரங்கப் பட்டணத்தில் ஆட்சிக்கு வந்து கிழக்கிந்தியக் கம்பெனியிரை எதிர்த்துக் கடும் போர் செய்து வந்தார். சின்னமலை ஆயிரக்கணக்கான கொங்கு இளைஞர்களைத் திரட்டி மைசூர் சென்றார். சின்னமலையின் கொங்குப்படை சித்தேசுவரம், மழவல்லி, சீரங்கப்பட்டணம் போர்களில் திப்புவின் வெற்றிக்குப் பெரிதும் உதவியது. குறிப்பாக 40,000 வீரர்களோடு மழவல்லியில் போரிட்ட வெள்ளையர் படைகட்குக் கொங்குப்படை பெரும் சேதத்தை உண்டாக்கியது. நெப்போலியனிடம் படை உதவி கேட்டுத் திப்பு சுல்தான் அனுப்பிய தூதுக்குழுவில் சின்னமலையின் மெய்க்காப்பாளர் கருப்பசேர்வையும் இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நான்காம் மைசூர்ப் போரில் மே 4, 1799-இல் கன்னட நாட்டின் போர்வாள் ஆன திப்பு சுல்தான் போர்க்களத்தில் வீரமரணம் எய்திய பின் சின்னமலை கொங்கு நாடு வந்து ஓடாநிலை என்னும் ஊரில் கோட்டை கட்டிப் போருக்குத் தயார் ஆனார். ஏற்கெனவே ஏப்ரல் 18, 1792-இல் தான் வாங்கிய சிவன்மலை - பட்டாலிக் காட்டில் வீரர்கட்குப் பயிற்சி அளித்தார். ஆயுதங்கள் தயாரித்தார். ஓடாநிலையில் பிரெஞ்சுக்காரர் துணையோடு பீரங்கிகளும் தயாரிக்கப்பட்டன. தீர்த்தகிரிச் சர்க்கரை உத்தமக் காமிண்ட மன்றாடியார் என்று சின்னமலை தன்னைப் பாளையக்காரராக அறிவித்துக் கொண்டு கொங்குநாட்டுப் பாளையக்காரர்களை ஓரணியில் சேர்க்க முற்பட்டார். போராளிகளின் கூட்டமைப்பை ஏற்படுத்தி விருப்பாட்சி கோபால நாயக்கர், திப்புவிடம் பணியாற்றிய மராட்டிய மாவீரர் தூண்டாஜிவாக், பரமத்தி அப்பாச்சி ஆகியவர்களோடு இணைந்து ஜூன் 3, 1800 அன்று கோவைக்கோட்டையைத் தகர்த்து அங்கிருந்து லெப்டினன்ட் கர்னல் கே. க்ஸிஸ்டரின் கம்பெனியின் 5 ஆம் பட்டாளத்தை அழிக்க கோவைப்புரட்சிக்குச் சின்னமலை திட்டமிட்டார். முந்தியநாளே போராளிகள் அணியில் சிலர் அறிவிப்பின்றிச் சண்டையைத் தொடங்கியதால் கோவைப்புரட்சி தோல்வியுற்றது.
இடையறாத போர் வாழ்விலும் பல கோயில்களுக்குத் திருப்பணிகள் செய்தார். புலவர் பெருமக்களை ஆதரித்தார். சின்னமலை கோயில் கொடை பற்றிய கல்வெட்டுகள் சிவன்மலை, பட்டாலி, கவுண்டம்பாளையம் ஆகிய ஊர்களில் உள்ளன. சமூக ஒற்றுமை சின்னமலையிடம் மிகச் சிறப்பாக விளங்கியது. அவர் கூட்டமைப்பில் வேளாளர், நாயக்கர், வேட்டுவர், தாழ்த்த பட்டோர், தேவர், வன்னியர், நாடார் மற்றும் இஸ்லாமியர் பலர் இருந்தனர். ஓமலூர் சேமலைப் படையாச்சி, கருப்பசேர்வை, ஃபத்தே முகம்மது உசேன், முட்டுக்கட்டைப் பெருமாத்தேவன் சென்னிமலை நாடார் ஆகியோர் பலர் சின்னமலை படையில் முக்கியம் பெற்றிருந்தனர். எப்படியாவது சின்னமலையை ஒழிக்க வேண்டும் என்று ஆங்கிலேயர் முடிவு செய்தனர்.

[தொகு] வெற்றி
1801-இல் ஈரோடு காவிரிக்கரையிலும், 1802-இல் ஓடாநிலையிலும், 1804-இல் அறச்சலூரிலும் ஆங்கிலேயர்களுடன் நடைபெற்ற போர்களில் சின்னமலை பெரும் வெற்றி பெற்றார். ஓடாநிலைப் போரில் ஆங்கிலத் தளபதி கர்னல் மேக்ஸ்வெல் தலையைக் கொய்து மொட்டையடித்துச் செம்புள்ளி கரும்புள்ளி குத்தி ஊர்வலம் விட்டது குறிப்பிடத்தக்கது. சின்னமலையின் ஓடாநிலைக் கோட்டையைத் தகர்க்கக் கள்ளிக்கோட்டையிலிருந்து மிகப்பெரும் அளவில் பீரங்கிப்படை வந்தது. சுபேதார் வேலப்பன் அறிவுரைப்படி சின்னமலை ஓடாநிலையிலிருந்து தப்பிப் பழனிமலைத் தொடரில் உள்ள கருமலை சென்றார்.

[தொகு] தூக்கிலிடப்படல்
போரில் சின்னமலையை வெல்ல முடியாது என்று கண்ட ஆங்கிலேயர் சூழ்ச்சி மூலம், சின்னமலையைக் கைது செய்து சங்ககிரிக் கோட்டைக்குக் கொண்டு சென்று போலி விசாரணை நடத்தி ஜூலை 31,, 1805 அன்று தூக்கிலிட்டனர். தம்பியரும், கருப்ப சேர்வையும் உடன் வீரமரணம் எய்தினர்.
சின்னமலை நினைத்திருந்தால் கொங்குநாட்டு நிர்வாகப் பொறுப்பை ஏற்றுக்கொண்டு வரிவசூலில் பத்தில் மூன்று பங்கு பெற்றுத் தொடர்ந்து ஆட்சி செலுத்தி சுதேச சமஸ்தானம்போல 1947 வரை விளங்கியிருக்கலாம். ஆங்கிலேயரும் அவ்வாறே வேண்டிக்கொண்டனர். ஆனால் சின்னமலை அதை மறுத்து வீரமரணம் அடைந்தார். சின்னமலை ஆங்கில வெள்ளத்தைத் தடுக்கும் பெருமலையாக விளங்கினார்.

[தொகு] கௌரவிப்பு
முன்பு தீரன் சின்னமலை நினைவாகப் திருச்சிராப்பள்ளியை தலைமையிடமாக கொண்டு போக்குவரத்துக் கழகமும், கரூரை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டமும் இருந்தது. தீரன் சின்னமலைக்குத் தமிழக அரசு சென்னையில் உருவச்சிலை ஒன்றை அமைத்ததுள்ளது. தமிழக அரசின் சார்பில் ஓடாநிலையில் சின்னமலை நினைவு மணிமண்டபம் உள்ளது. ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குத் தீரன் சின்னமலை மாளிகை என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஏப்ரல் 17 அன்று அவர் பிறந்த நாளிலும், அவர் மறைந்த ஆடிப் பதினெட்டு நாளிலும் அவருக்கு அஞ்சலி செலுத்திக் கொங்கு மக்கள் தங்கள் நன்றியைச் செலுத்துகின்றனர். இந்திய அரசின் தபால்தந்தி தகவல் தொடர்புத்துறை 31 ஜூலை 2005 அன்று தீரன் சின்னமலை நினைவு அஞ்சல் தலை வெளியிட்டுள்ளது.
அன்புடன் ,
தங்கமணி ,
பட்லூர் .
நன்றீ: விக்கிபீடியா

அருள்மிகு வகீஸ்வரர் கோயில் - பட்லூர்


அருள் மிகு வாகீஸ்வரர் -சவுந்தரநாயகி கோயில் - பட்லூர்

அருள்மிகு கரியகாளியம்மன் -பட்லூர்


அருள்மிகு கரியகாளியம்மன் கோயில் பட்லூர்

பட்லூர் கல்வெட்டுகள்


பட்லூர் பழமையான கல்வெட்டுகள்

பழமையான ஆலமரம் பட்லூர்


பழமையான ஆலமரம் பட்லூர்

அருள்மிகு சென்றாய பெருமாள் கோயில் -பட்லூர்


அருள்மிகு சென்றாய பெருமாள் கோயில் -பட்லூர்

Monday, December 8, 2008

அருள்மிகு முத்துமாரிம்மன் கோயில் -பட்லூர்


அருள் மிகு முத்துமாரிம்மன் கோயில் - பட்லூர்

பவானி கூடுதுறை

வணக்கம்

அனைவருக்கும் வணக்கம்